ஒரு கோடி ரூபாய் ஸ்காலர்ஷிப் பெற்ற கூலித்தொழிலாளியின் மகள்!
வட இந்தியாவில் உள்ள ஒரு பகுதியில் தினக்கூலி வேலை செய்து வருபவரின் மகள் தான் இந்த புகைப்படத்தில் இருக்கும் ரோஹினி காவ்ரி. இவர் தனது குடும்பத்தில் உள்ள ஏழ்மையை கல்வியால் விரட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டு படித்தார்.
ஒரு கூலித்தொழிலாளியின் மகளுக்கு மேற்படிப்பு தேவையா? என்று அக்கம் பக்கத்தினர் பேசுவது குறித்து கவலைப்படாமல் படித்த ரோஹினி சமீபத்தில் பி.எச்.டி படிப்பை முடித்தார். இதனையடுத்து அவருடைய கண்டுபிடிப்புக்கு ரூ.1 கோடி ஸ்காலர்ஷிப் கிடைத்துள்ளது. தற்போது அவரை தூற்றியவர்கள் எல்லாம் போற்றி வருகின்றனர். கடின உழைப்புக்கு பலன் இல்லாமல் போகாது என்பதற்கு ரோஹினி ஒரு சிறந்த உதாரணம்