ஒரு டீ சொல்லுங்க..!
பால் சேர்க்காமல் சாப்பிடும் டீயே ஆரோக்கியமானது. பிளாக் டீ, மூலிகை டீ போன்றவை நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைச் செய்யக்கூடியவை. அவை அள்ளித்தரும் பலன்களில் சில…
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் சிலவகை புற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.
இதயத்துக்கு நல்லது. மாரடைப்பு வராமல் காக்கும். இதயத் தமனிகளில் ஏற்படக்கூடிய அடைப்புகள் வராமல் தடுக்கும்.
தொடர்ந்து பிளாக் டீ குடித்துவந்தால், கொழுப்புக் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்.
உடனடி எனர்ஜியைத் தரக்கூடியது. இதற்குக் காரணம், அதில் உள்ள தியோஃபிலின் (Theophylline).
தலைவலி, தூக்கமின்மை, மூச்சுத்திணறல், சீரற்ற இதயத்துடிப்பு பிரச்னை உள்ளவர்களும் கர்ப்பிணிகளும் பிளாக் டீயைத் தவிர்க்கலாம். கிரீன் டீ, மூலிகை டீயைப் பருகலாம்.
அல்கைலமைன் (Alkylamine) இருப்பதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
இயற்கையான ஃப்ளோரைடு இருப்பதால், எலும்பு மற்றும் பற்களுக்கு நல்லது.
பிளாக் டீயில் உள்ள பாலிஃபினால்கள், செல்களைப் பாதுகாக்கும். டி.என்.ஏ பாதிப்பைத் தடுக்கும்.