ஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம்! பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு

ஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம்! பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு

அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாஜக, தனக்கு கிடைத்துள்ள ஐந்து தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.50 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிமுக- பாஜக கூட்டணி குறித்து கருத்து கூறிய வைகோ, ‘அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட கிடைக்காது என்ற பயம் இருக்கின்றது. இந்தக் கூட்டணியில், ஒரு தொகுதிக்கு 50 கோடி ரூபாய் செலவழிக்க திட்டமிட்டுள்ளதாகனர். பிரதமர் மோடியிடம் கோடிக்கணக்கில் பணம் இருக்கின்றது. அந்த பணத்தை போலீஸ் மூலமோ, ஆம்புலன்ஸ் மூலமோ கொண்டு செல்வார்கள். ஆனால் எதிர்க்கட்சியினர் ஐம்பதாயிரம் பணம் கொண்டு சென்றாலும் பிடித்து விடுவார்கள். ஆனால், எத்தனை கூட்டணிகள் உருவானாலும், திமுக 40 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும்.

திமுக கூட்டணியில் மதிமுக உறுதி செய்யப்படாத நிலையில் வைகோ இவ்வாறு கூறியிருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்,

 

Leave a Reply