ஒரு பெண் நான்கு பேரிடம் காதலை சொல்கிறார்: விஜய் தந்தைக்கு பெண்கள் எதிர்ப்பு
இப்போதெல்லாம் ஒரு பெண் நான்கு ஆண்களிடம் தங்கள் காதலை சொல்வதாக சினிமா விழா ஒன்றில் பேசிய நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது
நாங்கள் விஜய் ரசிகைகளாக இருந்தாலும் அவருடைய தந்தை என்ன சொன்னாலும் அதை கேட்டுக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்று கூறிய ரசிகைகள், வீட்டில் உள்ள பெண்களை மதிக்க தெரியாதவர்களே வெளியே உள்ள பெண்கள் குறித்து தவறாக பேசுவார்கள் என்று பெண்கள் கூறியுள்ளனர்,
கேப்மாரி’ என்ற படத்தை இயக்கி வரும் எஸ்.ஏ.சந்திரசேகர், இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்தான் இந்த கருத்தை தெரிவித்தார் என்பதும் இதுதான் என்னுடைய கடைசி படம் என்று அவர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது