ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 லட்சம்: ஆசையுடன் சென்ற நடிகைக்கு விழுந்த குத்து!

ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 லட்சம்: ஆசையுடன் சென்ற நடிகைக்கு விழுந்த குத்து!

கடை திறப்பு விழா ஒன்றுக்கு செல்வதற்காக ஒரு மணி நேரத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு விழாவிற்கு சென்ற நடிகையின் முகத்தில் குத்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் தனியார் கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு நடிகை நூரின் ஷெரீப் என்பவர் அழைக்கப்பட்டிருந்தார். அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த பகுதியில் கூடியதால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது

இந்த நிலையில் காரிலிருந்து விழா மேடைக்கு நூரின் ஷெரீப் நடந்து செல்லும்போது ரசிகர்கள் முண்டியடித்ததை அடுத்து யாரோ மர்ம நபர்கள் நடிகையின் முகத்தில் குத்தி விட்டதாக தெரிகிறது. இதனால் காயத்துடன் அவர் கண் கலங்கி கொண்டே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு, ஒரு சில நிமிடங்கள் மேடையில் நடனமும் ஆடினார்

இந்த நிலையில் ஒரு மணி நேரத்துக்கு ரூபாய் இரண்டு லட்சம் என்று கடை திறப்பு விழாவுக்கு பேசி, வருகை தந்த நடிகை நூரினுக்கு கசப்பான அனுபவமே ஏற்பட்டுள்ளதால் இனி அவர் கடை திறப்பு விழா உள்பட எந்த பொது நிகழ்ச்சிக்கும் செல்லப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply