ஒரு மணி நேரத்திற்கு 90 கோடி சம்பாதிக்கும் முகேஷ் அம்பானி: பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மக்கள் வருமானமின்றி பசியும் பட்டினியுமாக இருக்கும் நிலையில் இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபரான முகேஷ் அம்பானி ஒரு மணி நேரத்திற்கு 90 கோடி சம்பாதிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

பேஸ்புக் கூகுள் உள்பட பல நிறுவனங்கள் அவருடைய ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதை அடுத்து அவருடைய வருமானம் எகிறி கொண்டே வருகிறது
அவர் உலகின் முதல் ஐந்து பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு 90 கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்தியாவிலேயே கொரோனா காலத்தில் அதிக அளவு சம்பாதித்தவர் முகேஷ் அம்பானி தான் என்ற புள்ளிவிவரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

Leave a Reply