ஒரு மணி நேரத்தில் மிஷின் ரிப்பேரா? ஆர்.கே. நகர் வாக்காளர்கள் கொதிப்பு
சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் இன்று காலை எட்டு மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். முதல் ஒரு மணி நேரத்தில் 7 சதவிதத்திற்கு மேல் வாக்குப்பதிவு நடந்துள்ளது
இந்த நிலையில் வாக்குப்பதிவு ஆரம்பித்த ஒருசில நிமிடங்களில் அந்த தொகுதியின் 77வது வாக்குச்சாவடியில் மின்னணி வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாகிவிட்டதால் அந்த பகுதியினர் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் பல நிபந்தனைகளை விதிக்கும் தேர்தல் ஆணையம் முதலில் தங்கள் பணியை சரியாக செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என்று வாக்காளர்கள் தங்கள் கருத்துக்களை ஆவேசமாக கூறி வருகின்றனர்
இதுகுறித்து திமுக வேட்பாளர் மருதுகணேஷ் கூறியபோது, ’77வது வாக்குச்சாவடியில் மக்கள் வாக்களிக்க நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். தேர்தல் ஆணைய அதிகாரிகள் உடனடியாக மாற்று மின்னணி இயந்திரத்தை கொண்டு வந்து இந்த வாக்குச்சாவடியில் தங்கு தடையின்றி வாக்குப்பதிவு நடைபெற ஆவண செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.