ஒரு ரூபாய் இட்லி விற்கும் பாட்டிக்கு கலெக்டர் பாராட்டு!

ஒரு ரூபாய் இட்லி விற்கும் பாட்டிக்கு கலெக்டர் பாராட்டு!

கடந்த 30 வருடங்களாக, ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும், கோவையை சேர்ந்த பாட்டி கமலாத்தாளை, மாவட்ட ஆட்சியர் நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார்.

கோவை வடிவேலம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த 85 வயது மூதாட்டி கமலாத்தாள், கடந்த 30 ஆண்டுகளாக அந்த பகுதியில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். இவரது சுவையான இட்லியை வாங்கிச் செல்ல சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

அரிசி, உளுந்து உள்பட அனைத்து பொருட்களின் விலை உயர்ந்த போதிலும் இட்லி விலையை உயர்த்தாமல் தொடர்ந்து ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டிக்கு, அவரது பேரன் புருசோத்தமன் என்பவர் உதவியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ஆட்சியர் ராசாமணி, தனது அலுவலகத்திற்கு கமலாத்தாள் பாட்டியை வரவழைத்து நேரில் பாராட்டு தெரிவித்தார். மேலும் அவருக்கு புதிய வீடு கட்டித்தரவும், தேவையான உதவிகளை வழங்கவும் தான் தயாராக உள்ளதாக, அவர் உறுதி அளித்தார்.

Leave a Reply