ஒரு லட்சம் விலையில் ஸ்மார்ட் ஹெல்மெட்
அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் (சி.இ.எஸ். 2018) ஸ்மார்ட் ஹெல்மெட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஒரு லட்சம் விலையில் ஸ்மார்ட் ஹெல்மெட்
லாஸ் வேகாஸ்:
ஹெட்-அப் டிஸ்ப்ளே கொண்ட மோட்டார்சைக்கிள் ஹெல்மெட் (தலைகவசம்) பிரபலமாகி வரும் நிலையில், இரண்டு நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட் ஹெல்மெட்களை அறிமுகம் செய்துள்ளன.
ஸ்கலில்லி டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் ஃபீனிக்ஸ் ஆக்மென்டெட் ரியாலிட்டி (AR) ஹெல்மெட் 1899 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.2 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஃபீனிக்ஸ் ஆக்மென்டெட் ரியாலிட்டி ஹெல்மெட்டில் பின்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இந்த கேமரா 180 கோணத்தில் டிரான்ஸ்பேரண்ட் ஹெட்-அப் டிஸ்ப்ளேவில், நேவிகேஷனுடன் வழங்குகிறது. இந்த ஹெல்மெட்டினை ஸ்மார்ட்போனுடன் ப்ளூடூத் மூலம் இணைக்கும் வசதியும் வழங்கப்படுதிறது. இதனால் வாய்ஸ் கமாண்ட் கொண்டு அழைப்புகள் மற்றும் இசையை இயக்க முடியும்.
மற்றொரு நிறுவனமான பார்டர்லெஸ் 360 கோணத்தில் பார்க்க வழி செய்யும் ஸ்மார்ட் ஹெல்மெட்டை அறிமுகம் செய்துள்ளது. கிராஸ்ஹெல்மெட் என அழைக்கப்படும் இந்த ஹெல்மெட்டில் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பைஃபோகல் ஹெட்-அப் டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருப்பதால் கேமராவின் பின்புறம் பார்க்க வழி செய்கிறது. டிஸ்ப்ளே ஹெல்மெட்டின் நடுவே வைக்கப்பட்டிருப்பதால், காரில் உள்ள ரியர்-வியூ கண்ணாடி போன்ற தோற்றத்தை வழங்கப்படுகிறது.
கிலாஸ்ஹெல்மெட்டில் வெப்பநிலை, நேவிகேஷன் மற்றும் போன் சர்வீஸ் உள்ளிட்ட தகவல்களை வழங்குகிறது. ஹெல்மட்டில் உள்ள ஜி.பி.எஸ். வாடிக்கையாளரின் ஸ்மார்ட்போனில் உள்ள ஜி.பி.எஸ் அம்சத்தை பயன்படுத்துகிறது. இத்துடன் நாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டிருப்பதால், வெளிப்புறத்தில் உள்ள சத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.
இந்த அம்சம் இருப்பதால் காற்று மற்றும் இன்ஜின் சத்தத்தை கட்டுபடுத்த முடியும். மேலும் க்ரூப் டாக் அம்சம் வழங்கப்பட்டிருப்பதால் பயணங்களின் போது மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் இருக்கம் இடத்தை பகிர்ந்து கொள்ள முடியும். கிராஸ்ஹெல்மெட் விலை 1599 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.0 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.