ஒரு வருடம் கழித்து சம்பளம் கொடுத்த விஜய் டிவி: கஸ்தூரி அதிருப்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார் என்பதும் அவருடைய பல ஆக்கபூர்வமான பேச்சுக்கள் அந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ஒரு வருடம் கழித்து தற்போது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளத்தை விஜய் டிவி கொடுத்துள்ளது என்றும் அதற்காக விஜய் டிவிக்கு நன்றி என்றும் கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்

இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதே குழந்தைகள் அமைப்பு ஒன்றில் இருக்கும் குழந்தைகளுக்கான ஆப்பரேஷன் செலவுக்காக தான் என்றும் ஆனால் எனது சம்பளத்தை ஒரு வருடம் கழித்து கொடுத்த விஜய் டிவிக்கு எனது நன்றி என்றும் அவர் கிண்டலுடன் நன்றி தெரிவித்துள்ளார்

Leave a Reply