ஒரு வாரம் முழுவதும் வேலைக்கு வந்தால் 3 குவார்ட்டர் பரிசு: வேலைக்கு ஆள் தேடும் நிறுவனம்
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி இருப்பதாகவும் வேலை கிடைக்காத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் உண்மையில் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று பல நிறுவனங்களின் அதிபர்கள் கூறிவருகின்றனர்
சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் வெல்டர், பில்டர், ஹெல்பர் ஆகிய வேலைக்கு ஆட்கள் தேவை என்றும் வேலைக்கு வருபவர்களுக்கு தினசரி சம்பளம் வழங்கப்படும் என்றும் ஒரு வாரம் முழுவதும் வேலைக்கு வருபவர்களுக்கு மூன்று குவார்ட்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஏற்கனவே சமீபத்தில் திருப்பூர் பனியன் கம்பெனி நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் வேலைக்கு வருபவர்களுக்கு தினமும் ஒரு குவாட்டர் மற்றும் டீ காசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே