ஒரு வினாடிக்கு 74,500 ஜிபி டேட்டா: ஒரு அதிசய தகவல்
உலகம் முழுவதும் இண்டர்நெட் என்பது தற்போது முக்கிய தேவையாக உள்ளது. பள்ளி, கல்லூரி, அலுவலகம், விஞ்ஞான கூடங்கள் என இண்டர்நெட் இல்லாத துறையே இல்லை எனலாம்
இண்டர்நெட்டின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, அதன் சேவையை வழங்கி வரும் நிறுவனங்களும் தொழில் போட்டி காரணமாக டேட்டாக்களை தாராளமாக அள்ளி வழங்கி வருகின்றன
இந்த நிலையில் உலகம் முழுவதும் ஒரு நொடிக்கு எவ்வளவு ஜிபி டேட்டா பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்த ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் உலகம் முழுவதும் சுமார் 390 கோடி பேர் இண்டர்நெட்டை பயன்படுத்துவதாகவும் அதனால் உலகம் முழுவதும் ஒரு வினாடிக்கு 74,500 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது
ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒருசில ஏழை நாடுகளில் அடிப்படை வசதி கொண்ட செல்போனே பெரும்பாலானோர்களிடம் இல்லை என்பதும் இந்த புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது