ஒரே ஆண்டில் 20,000 கோடி மதிப்பிலான எரிபொருட்கள் சேமிப்பு: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

சுங்கச்சாவடிகளில் பாஸ்டாக் முறையை அமல் செய்யப்பட்டதால் ஒரே ஆண்டில் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான எரிபொருள் சேமிக்க முடியும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்

சமீபத்தில் சுங்கச்சாவடிகளில் பாஸ்டாக் முறை கட்டாயமாக்கப்பட்டது இதனால் 80% சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரம் ஜீரோவாக உள்ளது என்று என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் சுங்கச்சாவடிகளில் பாஸ்டாக் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி மதிப்பிலான எரிபொருட்கள் சேமிக்க முடியும் என்றும் 80% சுங்கச்சாவடிகளில் எந்த வாகனமும் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை என்றும் தெரிவித்து உள்ளார்

Leave a Reply