ஒரே இடத்தில் 1000 ரோபோட்டுக்கள் நடனம் ஆடி கின்னஸ் சாதனை

ஒரே இடத்தில் 1000 ரோபோட்டுக்கள் நடனம் ஆடி கின்னஸ் சாதனை

robot21ஆம் நூற்றாண்டில் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப உலகில் பல மனிதர்கள் மணிக்கணக்கில் செய்யும் வேலையை ஒரு ரோபோ மிக எளிதான ஒருசில நிமிடங்களில் செய்து முடிக்கின்றது. வீடு கட்டுவது முதல் சாப்பாடு பரிமாறுவது வரை எங்கும் ரோபோ மயமாக மாறி வரும் நிலையில் சீனாவில் ரோபோக்களின் நடனம் ஒன்று கின்னஸ் சாதனை செய்துள்ளது.

ஒரே இடத்தில் சுமார் 1,007 ரோபோட்களை ஒன்றாக நடனமாட வைத்து சாதனை செய்யப்பட்டுள்ளது. 43.8 செ.மீ உயரம் கொண்ட ஆயிரம் ரோபோட்கள் ஒன்றாக இணைந்து ஒரே இடத்தில் நடனமாடியது. இந்த காட்சி பார்வையாளர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. சீனாவின் கியுண்டாவ் நகரில் நடைபெற்ற பீர் திருவிழாவின் போது இந்த சாதனை நிகழ்த்தி காட்டப்பட்டது.

இந்த ரோபோட் இயந்திரங்கள் ஒரே ஒரு செல்போன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. சுமார் ஒரு நிமிடம் தொடர்ச்சியாக நடனமாடி அசத்தியது என்பதும் இந்த சாதனையை கின்னஸ் பதிவு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply