ஒரே ஐ.எம்.இ.ஐ எண் 13 ஆயிரம் செல்போனுக்கா?

 என்ன ஆவது பாதுகாப்பு?

ஒரே ஐ.எம்.இ.ஐ எண்ணில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான செல்போன்கள் இயங்கி வருவதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது இதனால் பாதுகாப்பு துறையை கேள்விக்குறியாகும் என்று கூறப்படுகிறது

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தனது செல்பேசியில் குறிப்பிட்டுள்ள ஐ.எம்.இ.ஐ எண்ணுக்கும் அட்டைப்பெட்டியில் குறிப்பிட்டுள்ள எண்ணும் வெவ்வேறாக இருப்பதை அறிந்து அது குறித்து புகார் கொடுத்தார்

இந்த புகார் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை செய்தபோது ஒரே எண்ணில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் உருவாக்கி இருப்பது தெரியவந்தது

இதனை அடுத்து அந்நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்படுள்ளது. தொலைத்தொடர்பு விதிகளின்படி ஐ.எம்.இ.ஐ இல்லாமல் செல்போன் விற்பது தவறு என்பது போல், ஒரே ஐ.எம்.இ.ஐ எண்ணை பல செல்போன்களுக்கு பயன்படுத்துவதும் குற்றமாகும்

Leave a Reply