ஒரே ஒரு குறும்படம்: சொந்த வீடே இல்லாத இளைஞர் திடீரென தீவுக்கு சொந்தக்கார்:
சொந்த வீடு கூட இல்லாத இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே ஒரு குறும்படம் எடுத்ததால் ஒரு தீவுக்கு சொந்தக்காரரான அதிசய நிகழ்ச்சி ஒன்று நடந்தது
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லோபஸ் என்ற இளைஞர் துபாயில் தற்போது வசித்து வருகிறார். அவர் சமீபத்தில் இயக்கிய ஒரு குறும்படம் துபாயில் உள்ள குறும்பட போட்டி ஒன்றில் பங்கேற்றது
இந்த குறும்படத்திற்கு ஒரு லட்சம் பேர் திர்ஹாம்கள் பரிசாகக் கிடைத்தது. அதுமட்டுமின்றி இந்த இளைஞருக்கு கனடா அருகில் உள்ள ஹால்பாயிண்ட் தீவு ஒன்றும் பரிசாக அளிக்கப்பட்டது
5 கால்பந்து மைதானம் அளவு பரப்பளவை கொண்ட இந்த தீவு சுமார் 6 ஏக்கர் பரப்பளவு கொண்டது ஆகும்
இந்த பரிசு குறித்து மகிழ்ச்சியுடன் தனது கருத்தை தெரிவித்த லோபஸ், எனக்கு துபாயில் சொந்தமாக ஒரு வீடுகூட கிடையாது. ஆனால் தற்போது நான் ஒரு தீவுக்கே உரிமையாளர். என்னுடைய பெற்றோருடன் இந்தத் தீயில் என்னுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்