ஒரே ஒரு டுவிட்டில் டாக்டர் பட்டத்தையே காலி செய்த சின்மயி
தன்னை மட்டுமின்றி மொத்தம் ஒன்பது பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒருவருக்கு டாக்டர் பட்டமா? என பாடகி சின்மயி வைரமுத்து குறித்து பதிவு செய்த ஒரே ஒரு டுவிட்டால், வைரமுத்துவுக்கு கிடைக்க இருந்த டாக்டர் பட்டம் காலி ஆகிவிட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க இருப்பதாக அறிவித்தது. மேலும் இந்த டாக்டர் பட்டத்தை மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் கொடுக்கவிருப்பதாகவும் அழைப்பிதழ் வெளியிடப்பட்டது
இதுகுறித்து சின்மயி தனது டுவிட்டரில் ஒரே ஒரு ட்வீட்டை பதிவுசெய்தார். இந்த ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வருவதை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் கேன்சல் பெற்றார்
அதன் பின்னர் தற்போது வெளியாகியுள்ள புதிய அழைப்பிதழில் வைரமுத்து பெயர் நீக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு டாக்டர் பட்டம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது சின்மயி பதிவு செய்த ஒரு டூயட் இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது