ஒரே ஒரு பைக் இருந்தால் போதும்: சென்னையில் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம்
ஏற்கனவே பைக் டாக்ஸி சேவை டெல்லி மற்றும் அரியானாவில் இருந்துவரும் நிலையில் விரைவில் தமிழகத்திலும் பைக் டாக்ஸி அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
எனவே ஒரே ஒரு பைக் மட்டும் வைத்திருந்தால் போதும் மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் பைக் டாக்ஸிக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
டெல்லி மற்றும் ஹரியானாவில் பைக் டாக்ஸி ஓட்டுபவர்கள் மாதம் ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் வரை சம்பாதித்து வருவதால் அதே அளவு சென்னையிலும் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது