ஒரே நாளில் ரூ.22 கோடி வெள்ள நிவாரண நிதியை வாரி வழங்கிய தொழிலதிபர்கள்
சென்னை, கடலூர் உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.940 கோடி மற்றும் இரண்டாவது கட்டமாக ரூ.1000 கோடியும் நிவாரண நிதி வழங்கியுள்ளது. இதுதவிர பிற மாநில முதல்வர்களும் தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வாரி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல தொழிலதிபர்களும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கோடிக்கணக்கில் நிதி வழங்கி வருகின்றனர். இன்று ஒரே நாளில் ரூ.22 கோடி தொகையை தொழிலதிபர்கள் வழங்கியுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
இன்று நிவாரண நிதி வழங்கிய தொழிலதிபர்களின் பெயர்களும் அவர்கள் வழங்கிய தொகையும் பின்வருமாறு:
1.. டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் ரூ.5 கோடி.
2. சத்குரு ஸ்ரீ மாதா அம்ரிதாநயதமயி தேவி அவர்களின் சார்பில், மாதா அம்ரிதாநயதமயி மடத்தின் அறங்காவலர் சுவாமி இராமகிருஷ்ணாநயதா புரி ரூ.5 கோடி
3. டபே லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மல்லிகா ஸ்ரீனிவாசன் ரூ.3 கோடி
4. ஜாய் ஆலுகாஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜாய் ஆலுகாஸ் ரூ. 3 கோடி
5. இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என். சீனிவாசன் ரூ. 2 கோடி
6. ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஓய்.கே. கூ ரூ. 2 கோடி
7. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் முதன்மை பொது மேலாளர் பி. ரமேஷ் பாபு ரூ. 1 கோடி.
8. சிட்டி யூனியன் பாங்க் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் என். காமகோடி ரூ. 1 கோடி.