கையல் குப்பையை அகற்றிய காவலருக்கு கமிஷனர் கொடுத்த பரிசு
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பேய்மழை கொட்டு தீர்த்த நிலையில் மீட்புப்பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. சென்னையை பொருத்தவரையில் மீட்புப்பணிக்கு பாதுகாப்பு கொடுத்தது மட்டுமின்றி களத்தில் இறங்கி வேலை செய்த காவல்துறையினர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
குறிப்பாக வேப்பேரி காவல்நிலைய ஆய்வாளர் வீரகுமார், கையில் உறை கூட இல்லாமல் வாய்க்கால் தடுப்புகளை கையால் எந்தவித தயக்கமும் இன்றி நீக்கினார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வெளிவந்த புகைப்படமும், வீடியோக்களும் அவரை ஒரே நாளில் ஹீரோவாக்கிவிட்டது. பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்த நிஅலியில் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அவர்கள் காவல் ஆய்வாளர் அவர்களை பாராட்டு பரிசு வழங்கினார்.
இதுகுறித்து ஆய்வாளர் வீரக்குமார் கூறியபோது காவலர் பணி என்பது மக்களுக்கு சேவை செய்வதுதானே என்று கூறினார்.