ஒரே நாளில் 38 பேர்களுக்கு தூக்குதண்டனை: ஈராக் நீதிமன்றம் அதிரடி
ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் விடுபட்டுள்ள் ஈராக் நாட்டில் கொலை குற்றங்களில் ஈடுபட்ட 38 சன்னி போராளிகளுக்கு தீவிரவாத குற்றச்சாட்டுகளில் இன்று ஒரே நாளில் மரண தண்டனை வழங்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் நாட்டில் கொலை குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 38 சன்னி போராளிகள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் அவர்கள் தெற்கு ஈராக்கில் உள்ள நஸ்ரியா நகரின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 38 பேரும் சிறைச்சாலையில் நேற்று தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை அந்நாட்டின் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் 25-ந் தேதி ஒரே நாளில் ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சன்னி போராளிகள் 42 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.