ஒரே நாள், ஒரே நேரம்: ரஜினியின் ‘அதிசயம்’ குறித்த விவாதம்

ஒரே நாள், ஒரே நேரம்: ரஜினியின் ‘அதிசயம்’ குறித்த விவாதம்

ரஜினிகாந்த் தும்மினால் கூட அதையும் செய்தியாக்கி டி.ஆர்.பியை உயர்த்தி கொண்டிருக்கும் ஒருசில ஊடகங்கள், சமீபத்தில் ரஜினிகாந்த் கூறிய ‘அதிசயம்’, அற்புதம்’ குறித்து கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்தன.

இந்த நிலையில் இன்று ’அதிசயம் அற்புதம்’ என்ற இரண்டு வெவ்வேறு தலைப்புகளில்  இரண்டு பிரபல ஊடகங்களால் விவாத நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது

இந்த விவாதங்களில் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல்வாதிகள் பங்கு பெற்று தங்கள் எண்ணங்களை தெரிவிக்கவுள்ளனர். இதில் பெரும்பாலும் ரஜினிக்கு எதிரானவர்களே கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினி கூறிய இரண்டே இரண்டு வார்த்தைகள் இரண்டு பெரிய ஊடகங்களை ஒரு சிறப்பு விவாதமே செய்ய வைத்துவிட்டது என்பதால் அரசியலிலும் ரஜினி வெற்றிபெற்றுவிட்டதாகவே கருதப்படுகிறது

ரஜினி, அரசியல், விவாதம், அதிசயம், அற்புதம்,

Leave a Reply