ஒரே நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி-சிவகார்த்திகேயன்
எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய், தனுஷ்-சிம்பு போன்று சமீபத்தில் விஜய் சேதுபதி-சிவகார்திகேயன் தொழில் போட்டியாளர்களாக உள்ளனர். இருப்பினும் இருவரும் நட்புடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் விஜய்டிவியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்து கொண்டனர்.
விஜய் டிவியில் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியாக ’மக்கள் செல்வன் 25’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது.
இதில் விஜய் சேதுபதிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் அவர்கள் இருவரும் எடுக்கொண்ட செல்ஃபி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.