ஒரே நிமிடத்தில் இமேஜ் டெஸ்ட்-ஐ வேர்ட் டெக்ஸ்ட் ஆக மாற்றுவது எப்படி?
ஒரு இமேஜில் உள்ள டெக்ஸ்ட்டை வேர்டில் டெக்ஸ்ட்டாக மாற்ற வேண்டுமென்றால் மணிக்கணக்கில் உட்கார்ந்து டைப் செய்து கொண்டிருப்பதெல்லாம் பழைய காலம். இதற்கென ஒரு அலுவலகம் வைத்து இமேஜ் டெக்ஸ்ட்களை வேர்ட் டெக்ஸ்ட்களாக பலர் டைப் அடித்து கொண்டிருப்பார்கள். குறிப்பாக பழைய புத்தகங்களை புதுப்பிக்க இவ்வாறு செய்வது வழக்கம்
இந்த நிலையில் ஒரு இமேஜ் டெக்ஸ்ட்டை வேர்ட் டெக்ஸ்ட்டாக மணிக்கணக்கில் உட்கார்ந்து டைப் செய்யாமல் ஒரே நிமிடத்தில் வேர்ட் டெக்ஸ்ட் ஆக மாற்றுவது எப்படி என்பதை பார்க்கலாம்
* முதலில் http://www.i2ocr.com/free-online-tamil-ocr என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
* அதில் முதல் ஸ்டெப்பில் இமேஜ் டெக்ஸ்ட் மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். தமிழ் என்றால் டிராப்டவுனில் தமிழை தேர்வு செய்யுங்கள்
* பின்னர் ஸ்டெப் 2வில் இமேஜ், ஃபைல் வடிவில் இருக்கின்றதா? அல்லது யூஆர்எல் வடிவில் இருக்கின்றதா? என்பதை குறிப்பிடுங்கள்
* இதன்பின் மூன்றாவது ஸ்டெப்பில் நீங்கள் எந்த இமேஜை டெஸ்ட் ஆக மாற்ற விரும்புகின்றீர்களோ, அதனை அப்லோடு செய்யுங்கள். பின்னர் அருகில் உள்ள எக்ஸ்ட்ராக்ட் டெக்ஸ்ட்’ என்பதை க்ளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு இமேஜ் டெக்ஸ்டுகள், வேர்ட் டெக்ஸ்ட்டாக மாறியிருக்கும். இதனை நீங்கள் காப்பி செய்து கொள்ளலாம். அல்லது டெக்ஸ்ட், டாகுமெண்ட், பிடிஎஃப் மற்றும் எச்.டி.எம்.எல் வடிவில் டவுன்லோடும் செய்து கொள்ளலாம்.