ஒரே நிலத்தை இருவருக்கும் பதிவுசெய்ய முடியுமா?

ஒரே நிலத்தை இருவருக்கும் பதிவுசெய்ய முடியுமா?

landவாரிசு இல்லா நில உரிமையாளார் வைத்திருந்த 3 செண்ட் நிலத்தில் இருந்து 2 செண்ட் நிலத்தை வாங்கினேன். மீதி ஒரு செண்ட் நிலம் விற்கப்படாமல் அப்படியேதான் இருந்தது. ஆனால் அந்த மொத்த நிலத்தின் தாய்ப் பத்திரத்தை என்னிடம்தான் கொடுத்திருந்தார். இப்போது அவரும் அவருடைய மனைவியும் காலமாகிவிட்டார்கள். மீதி உள்ள ஒரு செண்ட் நிலத்தை நான் உரிமையாக்கிக்கொள்ள முடியுமா? அதற்கான சட்ட வழிமுறை என்ன?

மீதி உள்ள 1 செண்ட் நிலத்தை நீங்கள் எந்த காலத்திலும் சட்டப்படி உரிமையாக்கிக் கொள்ள முடியாது. நிலத்தின் உரிமையாளர் இந்து மதத்தை சேர்ந்தவராக இருந்தால் இந்து வாரிசுரிமை சட்டப்படி அந்த நிலம் முதலில் அவரது முதல் நிலை வாரிசுதாரர்களுக்கே உரிமையாகும்.

ஒரு வேளை அவருக்கு முதல் நிலை வாரிசுதாரர்கள் இல்லாவிடில் அந்த நிலம் அவரது இரண்டாம் நிலை வாரிசுதாரர்களுக்கு உரிமையாகும். அவ்வாறு இரண்டாம் நிலை வாரிசுதாரர்களும் இல்லாமல் போனால் அந்த நிலம் அவரது மூன்றாம் நிலை வாரிசுதாரர்களுக்கு உரிமையாகும். ஒருவேளை மூன்றாம் நிலை வாரிசுதாரர்களும் இல்லாமல் போனால், அந்த நிலம் அரசங்கத்துக்கு சொந்தமாகிவிடும்.

Leave a Reply