ஒரே நேரத்தில் 24 அணைகள் திறக்கப்பட்டதால் வெள்ளத்தால் மூழ்கும் கேரளா
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஒரே நேரத்தில் 24 அணைகள் திறக்கப்படுள்ளது. இதனால் ஒட்டு மொத்த கேரள மாநிலமே தண்ணீரில் மூழ்கியுள்ளது.
கேரள மாநிலத்தின் அதிகனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக இடுக்கியில் நிலச்சரிவுஏற்பட்டும், வெள்ளத்தில் மூழ்கியும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆசியாவின் பெரியவைகை ஆர்ச் அணை என்று அழைக்கப்படும் இடுக்கி அணை அதன் முழுகொள்ளவை எட்டியது. 2,403அடி கொள்ளளவைக் கொண்ட இடுக்கி அணை, நேற்று இரவு 11 மணியளவில் 2 .400. 28 அடியை எட்டியது.
இதனால் இடுக்கி அணயின் 5 மதகுகளும் திறந்துவிடப்பட்டு, விநாடிக்கு2,50,000 லிட்டர் தண்ணீர்வெளியேற்றப்படுகிறது. இது வழக்கத்தை விட இருமடங்கு அதிகமாகும். இதனால் இடுக்கியில் உள்ள பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
வயநாடு,இடுக்கி பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பற்ற 24 மணிநேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுள்ளது. பம்பைநதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுள்ளது. இந்த கனமழையால் இடுக்கில் 11 பேரும், மலபுரத்தில் 6 பேரும், எர்னாகுளத்தில் 3 பேரும் வய்நாட்டில் கொழிக்கோடில்இருவரும், வயநாட்டில்ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.