ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் மோடி: தமிழிசை தகவல்
பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் 6-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, கூட்டணிக்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை செய்வார் என்றும் அதுமட்டுமின்றி ஒரே மேடையில் அவர்களுடன் பங்கேற்று பேசுவார் என்\றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள கிளபாக்கத்தில் பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை அவர் நேற்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோடி பங்கேற்கும் இக்கூட்டம், தமிழகத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும். தேமுதிக உடனான பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் இறுதி வடிவம் பெற்றுவிடும். அதிமுக கூட்டணியில் கிட்டதட்ட அவர்கள் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது
மார்ச் 6ம் தேதி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் இடம்பெறுவார்கள் என்று தமிழிசை கூறினார்.