சென்னை நகரை இரண்டரை மணி நேரத்தில் ஒற்றை ரயிலில் பயணிகள் சுற்றிவரும் விதமாக, சுற்றுவட்டப் பாதை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது
அதாவது மாதவரத்தில் ஏறி சென்னையின் கிழக்கே அடையாறு, மேற்கே கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூா் வரை 81 கி.மீ. தொலைவுவரை சுற்றுவட்டப்பாதை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படவுள்ளது
இந்த சுற்று ரயில் மாதவரத்தில் இருந்து கோயம்பேடு, சோழிங்கநல்லூா், அடையாறு வழியாக மாதவரத்தை அடையும்
இதனால் பெரும்பாக்கத்தில் இருந்து பெரம்பூருக்கு, தரமணியில் இருந்து திருமங்கலத்துக்கு பயணிகள் செல்லலாம்.
அதேபோல் போரூரில் இருந்து ஒற்றை ரயிலில் பெருங்குடி அல்லது காரப்பாக்கம் உள்பட பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள நிலையங்களுக்கு செல்ல முடியும்.