ஒலிம்பிக் போட்டியில் பிரேக் நடனம்: இளைஞர்கள் உற்சாகம்
அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக பிரேக் டான்ஸ் போட்டியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள் உற்சாகம் அடைந்துள்ளது. முதல் முறையாக ஒலிம்பிக்கில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஆட்டத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதில் ஆடவர் பிரிவில் ரஷ்யாவை சேர்ந்த பம்ப்லிபீ என்ற அணியும், மகளிர் பிரிவில் ஜப்பானை சேர்ந்த ‘ரேம்’ என்ற அணியும் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. நடனத்தை விளையாட்டாக அங்கீகரித்து இளையோர் ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக நடத்தப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக நடன கலைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்தப் போட்டியை எப்படி வெற்றியை நடுவர்கள் மதிப்பெண் அளித்து முடிவு செய்கின்றனர். பிரேக் நடனக்கலைஞர்களின் நடன நளினம், இசை, புதுமை, ஆகிய அம்சங்களை கொண்டு நடுவர்கள் மதிப்பெண் வழங்குகின்றனர்.