ஒல்லியாக இருக்கும் என்னை தோற்கடிக்க இத்தனை பெரிய கூட்டணியா? சந்திரசேகரராவ்

ஒல்லியாக இருக்கும் என்னை தோற்கடிக்க இத்தனை பெரிய கூட்டணியா? சந்திரசேகரராவ்

தெலுங்கானா மாநிலத்தில் டிசம்பர் 7ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும், சந்திரசேகரராவ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கூட்டணியும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கூறியதாவது:
தெலுங்கானா தேர்தலில் என்னை எதிர்க்க பல கட்சிகள் முயன்று வருகின்றன. ஒல்லியாக இருக்கும் என்னை சமாளிக்க பா.ஜனதா, காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு, தெலுங்கானா ஜன சமிதி உள்பட பல கட்சிகள் களத்தில் உள்ளன.

இம்மாநிலத்தில் 60 ஆண்டுகள் காங்கிரசும், 18 ஆண்டுகள் தெலுங்கு தேசமும் ஆட்சி செய்துள்ளன. ஆனால் அவர்கள் செய்யாத வளர்ச்சியை நான் 4 ஆண்டுகளில் செய்திருக்கிறேன்.

Leave a Reply