ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து: சேலத்தில் பரபரப்பு
சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டது.
இன்று காலை சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் திடீரென தீப்பற்றியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலற தொடங்கியதால் உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது
இதனையடுத்து பேருந்தில் இருந்து ஜன்னல் வழியே பயணிகள் குதித்து உயிர்தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.