ஓடும் ரயிலில் குழந்தை பெற்ற பெண்
உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கி என்ற பகுதியில் துர்ஜியானா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது
இதனையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. அவருக்கு பிரசவம் பார்க்க டாக்டர்கள் யாரும் இல்லாததால், ரயில்வே போலீசார்களே பிரசவம் பார்த்தனர்.
சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற பெண்ணும், குழந்தையும் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்