ஓட்டுனர் இன்றி தானியங்கி கார் இந்தியாவுக்கு எப்போது வரும்?
அமெரிக்காவில் ஓட்டுனர் இன்றி தானியங்கி கார்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கார் இந்தியாவுக்கு எப்போது வரும் என்பதே பலரது கேள்வியாக உள்ளது
ஓட்டுநர் இன்றி தானாக ஓடும் கார் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை சர்வதேச கார் கம்பெனி நிறுவனங்கலான ஜெனரல் மோட்டார்ஸ், ஆல்பெட் இங்கஸ் மற்றும் வேமோ குழுவினர் உருவாக்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பொது சாலைகளில் தானியங்கி வாகனங்களை அனுமதிப்பது குறித்து பல்வேறு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இவற்றில் ஸ்டீரிங் வீல், ஃபூட் பெடல்கள், கண்ணாடிகள் மற்றும் மனித ஓட்டுநர்கள் இன்றி தானியங்கி வாகனங்களை சோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டன.
ஓட்டுநர் இன்றி தானாக இயங்கும் இக்கார்களில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களின் மூலம் இயக்கப்படுகிறது. தற்போது தயார் நிலையில் உள்ள இந்த கார்கள் வருகிற ஏப்ரல் மாதம் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் சோதனை செய்ய அனுமதி கோரப்பட்டிருந்தது.
கலிபோர்னியாவின் நிர்வாக அமைப்பு இதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து பொது அறிவிப்பு மார்ச் 2-ந்தேதி மாவட்ட மோட்டார் வாகன துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மார்ச் 2-ம் தேதி முதல் 30 நாட்களுக்கு பிறகு ஏப்ரல் மாத முதல் வாரத்தில் சோதனை ஓட்டம் துவங்குகிறது.
தானியங்கி வாகனங்களை தயாரித்திருக்கும் நிறுவனங்கள் ஏப்ரல் மாதம் முதல் பாதுகாப்பு ஓட்டுநர், ஓட்டுநர் இன்றி மற்றும் டிப்ளாய்மெண்ட் என மூன்று விதங்களில் சோதனை செய்ய அனுமதியை பெற விண்ணப்பிக்க முடியும்.
தானியங்கி வாகனங்களை சோதனை செய்வதில் கலிபோர்னியா வெளிப்படையாக இருப்பபதால் ஜெனரல் மோட்டார்ஸ், வேமோ மற்றும் உபெர் உள்ளிட்ட நிறுவனங்கள் தானியங்கி வாகனங்களை பொது மக்கள் பயன்பாட்டில் ஈடுப்படுத்துவதில் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகின்றன.
கலிபோர்னிய மோட்டார் வாகன துறையில் இதுவரை மட்டும் 50-க்கும் அதிகமான நிறுவனங்கள் சுமார் 300 தானியங்கி வாகனங்களை சோதனை செய்ய உரிமம் பெற்றிருக்கின்றன. இதற்கென 1000 பாதுகாப்பு ஓட்டுநர்கள் உரிமம் பெற்றிருக்கின்றனர். சோதனை துவங்கும் போது இந்த வாகனங்களில் மனிதர்கள் இன்றி சோதனை நடத்த நிறுவனங்கள் துவங்கலாம்.