ஆனாலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
கேரளாவில் ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கமான ஒன்றே.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப் படுவதாகவும், தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைக்கவிருப்பதாகவும், நாளை உத்ராட சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 31-ந் தேதி திருவோண தின சிறப்பு வழிபாடு, செப்டம்பர் 1-ந் தேதி அவிட்டம் நாள் சிறப்பு பூஜை, 2-ந் தேதி சதயம் நாள் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்றும், 5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சபரிமலை கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கான தடை நீடிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது