ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்க வழக்கு: நவம்பர் 2க்கு ஒத்திவைப்பு
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமியை எம்எல்ஏக்கள் சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுத்தனர். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது கொறடா உத்தரவை மீறி முதல்வருக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் உள்பட 12 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். எனவே அரசுக்கு எதிராக வாக்களித்த 12 பேரையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த அக்டோபர் 27ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் இந்த வழக்கை நீதிபதி நவ.2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.