ஓபிஎஸ் என்னை சந்தித்து மன்னிப்பு கேட்டார்: தினகரன்

ஓபிஎஸ் என்னை சந்தித்து மன்னிப்பு கேட்டார்: தினகரன்

முதல்வா் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் என்னை சந்திக்க முற்பட்டதாகவும் இந்த சந்திப்பில் ஓபிஎஸ் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஓபிஎஸ் தன்னை சந்தித்தபோது “நான் தவறு செய்துவிட்டேன். உங்களை எதிர்த்து பேசியிருக்கக் கூடாது. எடப்பாடி பழனிசாமியை பதவியிறக்க வேண்டும்” என்று பேசியதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மேலும் நான் இந்த சந்திப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த விவகாரம் நடைபெற்று தோராயமாக ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பா் மாத இறுதி வாரத்தில் ஓ.பன்னீா் செல்வம் மீண்டும் தனது நண்பா் மூலம் என்னை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த சந்திப்பை நான் மறுத்துவிட்டேன்.

ஓ.பன்னீா் செல்வம் நேரம் கேட்டதற்கான தகவலை வெளியிட்டதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. ஓ.பன்னீா் செல்வம் தன்னை சந்திக்க முயற்சிப்பதற்கு முற்றிப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் நான் தற்போது இதை கூறுகிறேன்.

ஓ.பன்னீா் செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைவது என்பது தற்கொலைக்கு சமமானது. அமமுக சார்பில் பொதுத் தோ்தலில் போட்டியிட்டு தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் எனது நோக்கம். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. இவ்வாறு தினகரன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Reply