ஓபிஎஸ் சகோதரர் அதிமுகவில் இருந்து திடீர் நீக்கம்! காரணம் என்ன?

ஓபிஎஸ் சகோதரர் அதிமுகவில் இருந்து திடீர் நீக்கம்! காரணம் என்ன?

தமிழக துணை முதல்வர் மற்றும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் சகோதரர் ஓ.ராஜா, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓ. ராஜா (பெரிய குளம் முன்னாள் நகர மன்ற தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply