ஓபிஎஸ் தகுதிநீக்க வழக்கு: ஜனவரி 9க்கு ஒத்திவைப்பு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி முக கொறடா சக்கரபாணி, டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்றைய விசாரணையில் இந்த வழக்கு ஜனவரி 9க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் குறித்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.