இங்கிலாந்து நாட்டின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற ஓய்வு எடுத்துக் கொள்வதாக சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டி விளையாடி வந்ததால் தனது குடும்பத்தினரை மிஸ் செய்ததாகவும், அதுமட்டுமன்றி சமீபத்தில் அவரது தந்தை இறந்ததால் அவரது குடும்பத்தினர் மிகவும் மனவருத்தத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் குடும்பத்துடன் சிலகாலம் பொழுதை கழிக்க விரும்புவதை அடுத்து கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விடை பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் முடிவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆதரவு தெரிவித்துள்ளது. அவரது முடிவுக்கு நாங்கள் முழுமையாக ஆதரவு தருகிறோம். சிறிது காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பது அவருக்கு நலமாக இருக்கலாம். அவருடைய உணர்வுகளையும் நலத்தையும் வெளிப்படையாக கூறுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
எங்களுடைய வீரர்களின் மனநிலை, உடல்ரீதியான நலன் ஆகிய இரண்டு முக்கிய, கொரோனா பாதிப்பு சூழலில் எங்கள் வீரர்கள் போட்டிக்கு தயாராக இருக்கவும், பாதுகாப்பாக இருக்கவும் நாங்கள் அனைத்து வழிவகைகளையும் செய்வோம். பென் ஸ்டோக்ஸ் தனது ஓய்வு நேரத்தை எடுத்துக் கொண்டு அவர் எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது