ஓராண்டில் வீடுகளின் விலைகள் 30% சரியும்
இந்தியாவின் முக்கியமான 42 நகரங்களில் அடுத்த 6 முதல் 12 மாதங்களில் வீடுகளின் விலை 30 சதவீதம் வரை சரியக்கூடும். இதன் காரணமாக 2008-ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட வீடுகளில் சந்தை மதிப்பு ரூ. 8 லட்சம் கோடி வரை சரியக்கூடும் என பிராப் ஈக்விட்டி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
42 நகரங்களில் 22,202 டெவலப் பர்கள் உருவாக்கிய 83,650 புரா ஜக்ட்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. தற்போதைய சந்தை மதிப்பு ரூ.38,55,044 கோடி யில் இருந்து 8 லட்சம் கோடி சரிந்து ரூ.31,52,170 கோடியாக இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பணமதிப்பு நீக்கப்பட்டிருப்ப தால் முறைப்படுத்தப்படாத இந் திய ரியல் எஸ்டேட் சந்தை கடுமை யாக பாதிப்படையும். சராசரியாக வீடு வாங்கும் ஐந்து நபர்களில் ஒரு வர் மட்டுமே அனைத்து தொகைக் கும் காசோலை கொடுத்து வாங்கு கிறார். குறுகிய காலத்துக்கு இதில் மந்த நிலை இருக்கும். அதே போல குறுகிய காலத்தில் மறுவிற் பனையாகும் வீடுகள் இருக்காது. இந்த நிலை மாற சில காலம் ஆகும்.
முறைப்படுத்தப்பட்ட கட்டுமான நிறுவனங்கள் அடுத்த 9 முதல் 12 மாதங்களில் மேம்பட்ட நிலையில் இருப்பார்கள். குறுகிய காலத்தில் சிக்கல்கள் இருந்தாலும் நீண்ட காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மை உருவாகும் என பிராப்ஈக்விட்டி தெரிவித்திருக்கிறது.