ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் அனுமதிக்கப்படுமா? வாக்கெடுப்பில் மக்கள் ஆர்வம்

ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் அனுமதிக்கப்படுமா? வாக்கெடுப்பில் மக்கள் ஆர்வம்

உலகின் பல நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து தரலாம் என தைவான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்ததால் நேற்று அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் தைவான் நாட்டு மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். பொது வாக்கெடுப்பில் 10 கேள்விகளுக்கு பொது மக்களின் கருத்து கேட்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த வாக்கெடுப்பின் முடிவை பொருத்தே தைவான் அரசு ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கும் என கருதப்படுகிறது.

ஒரு வேளை ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கி தைவான் சட்டம் இயற்றினால், அவ்வாறு சட்டம் இயற்றிய முதல் ஆசிய நாடு என்ற பெயர், அந்த நாட்டுக்கு கிடைக்கும்.

Leave a Reply