கங்கை நதியை தூய்மைப்படுத்த உண்ணாவிரதம் இருந்த பேராசிரியர் மரணம்
கங்கை நதியை சுத்தப்படுத்த வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த முன்னாள் பேராசிரியரும் சமூக ஆர்வலருமான ஜிடி அகர்வால் நேற்று மரணம் அடைந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பேராசிரியரும் கங்கை நதி குறித்து பல விஷயங்கள் அறிந்தவருமான ஜிடி அகர்வால் கங்கை நதியை சுத்தம் செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும், கங்கோதிரி மற்றும் உத்தரகாசி இடையே கங்கை இடையூறு இன்றி பாய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
அவருடைய 100 நாட்களை தாண்டிய நிலையில் நேற்று முன் தினம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனாஇயடுத்து அவர் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. கங்கை நதியின் தூய்மைக்காக உண்ணாவிரதம் இருந்து பேராசிரியர் ஒருவர் மரணம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.