கஜா நிவாரண நிதி குறித்து அனைத்து கட்சி கூட்டம்: அன்புமணி வலியுறுத்தல்
கஜா புயலால் டெல்டா பகுதி மக்கள் பாதிப்பு அடைந்து ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிவாரண நிதி தரவில்லை. இடைக்கால நிவாரண நிதி கூட பெற முடியாத நிலையில் தமிழக அரசு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் நிவாரண நிதி தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, குழுவாக மத்திய அரசை சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், புயல் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்க பல கிராமங்களுக்கு இன்னும் அதிகாரிகள் செல்லவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.