கஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் இன்று இரவு பாம்பன் மற்றும் கடலூர் இடையே கரையை கடக்கவுள்ள நிலையில் புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது.
புயல் பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன
இந்த நிலையில் பாம்பன் துறைமுகம், வானிலை ஆய்வுக்கூடம் உள்ளிட்ட அலுவலகங்களில் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதனாஅல் புயல் எச்சரிக்கை குறித்த தகவல்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் எங்கும் 936 அவசர கால ஊர்திகள், 41 இரு சக்கர ஊர்திகள் இயக்கப்பட்டு வருகின்றன