கஜா புயல் நிவாரணமாக ரூ.173 கோடி ஒதுக்கிய மத்திய அரசு
கடந்த மாதம் கஜா புயல் தமிழகத்தில் உள்ள டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சீரழித்த நிலையில் இந்த புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
சமீபத்தில் மத்திய குழுவினர் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட்டு சென்றுள்ள நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு ரூ. 173 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய வேளாண்மைத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த தொகையில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு நிவாரணம் அளிக்க ரூ. 93 கோடியும், தோட்டப் பயிர்களுக்கு இழப்பு வழங்க ரூ. 80 கோடி ஒதுக்கீடுயும் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.