கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கிய நிறுவனங்கள்
கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா பகுதி கடுமையாக சேதம் அடைந்திருக்கும் நிலையில் புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண உதவி கிடைக்க லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நிதியுதவி குவிந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது புயல் பாதிப்புக்காக ராம்கோ சிமெண்ட், வேலம்மாள் கல்வி அறக்கட்டளை, சரவணா ஸ்டோர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தலா ரூ.1 கோடி முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.
அதேபோல் எஸ்.ஆர்.எம். குழுமம் சார்பில் முதல்வரின் கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை எஸ்.ஆர்.எம். குழுமம் சார்பில் பாரிவேந்தர், ரவிபச்சமுத்து, சத்தியநாராயணன் வழங்கினர்