கஜா புயல் நிவாரண நிதி: நடிகர் விக்ரம் கொடுத்த மிகப்பெரிய தொகை

கஜா புயல் நிவாரண நிதி: நடிகர் விக்ரம் கொடுத்த மிகப்பெரிய தொகை

கஜா புயல் நிவாரண நிதியாக தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நிதியளித்து வருகின்றனர். குறிப்பாக லைகா நிறுவனம் ரூ.1.01 கோடி, சிவகுமார் குடும்பத்தினர் ரூ.25 லட்சம், ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், விஜய் ரூ.45 லட்சம், விஜய்சேதுபதி ரூ.25 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சம், நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்

இந்த நிலையில் நடிகர் விக்ரம் சற்றுமுன் ரூ.25 லட்சம் கஜா புயல் நிவாரண நிதியாக வழங்கியுள்ள செய்தி வெளிவந்துள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் திரையுலகினர்கள் மிகப்பெரிய உதவி செய்து வருவது அவர்கள் மீதான நன்மதிப்பை மேலும் உயர்த்தும் வகையில் உள்ளது.

Leave a Reply