கஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வரும் நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தில் கரையை கடக்குக்ம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி வரும் 15ஆம் தேதி பிற்பகல் கடலூர் பாம்பன் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் நவம்பர் 14 இரவு முதல் மழை பெய்ய தொடங்கும் என்றும் சென்னைக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றாலும் நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் நல்ல மழை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply