கஜா புயல் வழக்கு: 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை சிதறடித்த கஜா புயலால் அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்தில் உள்ளனர். குறிப்பாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தங்குவதற்கு இடமில்லாமல் கோவில், பள்ளிகளில் தங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசு, மாநில அரசின் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தருவது தொடர்பாக வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது
இன்றைய விசாரணையில் 5 மாவட்ட ஆட்சியர்கள், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஆகியோர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு, மாநில அரசின் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தருவது தொடர்பாக தஞ்சை, திருவாரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகை மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது