கடந்த 10 ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி சொத்துகள் 400% அதிகரிப்பு

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி சொத்துகள் 400% அதிகரிப்பு

Wealth_2847684f_2847714f
2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இந்தியர்களின் சராசரி சொத்து 400% அதிகரித்துள்ளது என்று ‘நியூ வேர்ல்ட் வெல்த்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலக்கட்டத்தில் ஐரோப்பியர்களின் சராசரி சொத்து 5% குறைந்துள்ளது.

வளரும் நாடுகளான இந்தியா, சீனா மற்றும் வியட்நாமில் சராசரி சொத்து இந்த பத்தாண்டுகளில் 400% அதிகரித்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியர்களின் சராசரி சொத்து 100%-ம், கனடா நாட்டுக்காரர்களின் சராசரி சொத்து 50%-ம் அதிகரித்துள்ளன.

ஐரோப்பாவில் சொத்து உருவாக்கத்தின் சரிவுக்குக் காரணம், ஐரோப்பாவிலிருந்து செல்வந்தர்கள் வெளியேறி வருவதே. 2008-ம் ஆண்டு உலக நிதி நெருக்கடி மற்றும் இது தொடர்பான வீட்டு வசதி நெருக்கடி காரணமாக ஐரோப்பிய குடிமகன்களில் சொத்து சேகரிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது.

வரும் காலங்களிலும் ஐரோப்பா தனது முதன்மைத் துறைகளின் வேலைகளை ஆசியாவிடம் இழக்கவே வாய்ப்புள்ளது. குறிப்பாக சீனா, இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு ஐரோப்பிய வேலைகள் அவுட்சோர்ஸ் ஆவது அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

இந்த அறிக்கையில் சொத்து என்பதை ‘ஒரு நபரின் நிகர சொத்துகள்’ என்பதாக வரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதில் அனைத்து விதமான அசையா சொத்துக்கள், ரொக்கம், பங்குகள், வர்த்தக வட்டித்தொகைகள் ஆகியவை உள்ளடங்கும்.

Leave a Reply